
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் மற்றும் 3 வருடங்களுக்கு இன்டர்நெட் பேக் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் லேட் அறிவித்துள்ளார். ஒரு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரையும் குடும்ப தலைவிகளாக்கி இருக்கிறோம்.
இந்தப் பெண்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இலவச இன்டர்நெட் வழங்கப்படும். அதேசமயம் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது 40 லட்சம் ஸ்மார்ட் ஃபோன்களை ராஜஸ்தானில் உள்ள பெண்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.