
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி போன்ற பல்வேறு தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் போது ஸ்டார்ட்டப் டிஎன் வேளாண்மை இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா இராமநாதன் தடை அதை உடை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார். அதன் பிறகு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு. வெங்கடேசன் அறிவோம் வரலாறு என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீப ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.