கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பூஜாவுக்கு அமரேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து அமரேஷ் குடும்பத்தினர் பூஜாவிடம் நீ கருப்பாக இருக்கிறாய் என நிறத்தை காரணம் காட்டி கிண்டலடித்து தர குறைவாக பேசி வந்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பூஜா கடந்த 15-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பூஜாவின் பெற்றோர் அனைத்து புகாரில் கூறியிருப்பதாவது, பூஜாவின் தற்கொலைக்கு அவரது மாமியாரும், கணவரின் மூத்த சகோதரர் வீரகவுடாவும் தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். ஷாபூறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அமரேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டவுடன் மனைவியை தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தார். அதற்குள் இந்த விபரீதம் சம்பவம் நடந்தது.