
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி மீனா. இந்த தம்பதிகளின் இரண்டாவது மகள் நந்தினி (21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் இவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தகவல் தெரிந்த இரு வீட்டினரும் இவர்களை ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் ராஜபாளையம் இஎஸ்ஐ காலணியில் வசித்து வந்த நிலையில் இவர்களுடன் குருநாதனின் தாயாரும் வசித்து வந்துள்ளார். இதனிடையே நந்தினி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரை மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியுள்ளார். இது பற்றி தனது தாயாரிடம் மன வேதனையுடன் கூடிய நந்தினி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.