
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அனைவராலும் அன்போடு கொண்டாடப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து வெளியான வேட்டையன் திரைப்படம் சரிவர வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ரஜினியுடன் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் ரஜினியிடம் கதை கூறிய நிலையில் ரஜினியும் கதையை கேட்டுள்ளார். ஆனால் மாரி செல்வராஜ் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் என்பதால் யோசித்துப் பார்த்த ரஜினி படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக இணையத்தில் தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. விரைவில் ரஜினியின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.