
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே தனது இன்ஸ்டாகிராம் டிபியை விராட் கோலியுடன் இருக்கும் படமாக மாற்றியுள்ளார்..
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் காட்சி படத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் எடுத்த புகைப்படமாக மாற்றினார். புகைப்படத்தில், இருவரும் கேமராவுக்கு போஸ் கொடுப்பதைக் காணலாம்.
கடந்த வாரம் ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் 20 வயதான இளம் வீரர் துனித் வெல்லலகே சிறப்பாக செயல்பட்டார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் 10 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் என்ற கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த புள்ளிகளுடன் முடித்தார். எனினும் இலங்கை அணி 41 ரன்களில் தோல்வியடைந்தது.

பின்னர் வெல்லலகே ஹோஸ்ட் ஒளிபரப்பாளரிடம், 12 பந்துகளில் 3 ரன்களில் ஆட்டமிழந்த கோலியை தனது “கனவு விக்கெட் விராட் கோலி தான்” என்று கூறினார். மேலும் அவர் விராட் கோலியுடன் உரையாடி அறிவுரைகளை கேட்டார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், இலங்கை இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் டிபியில் கோலியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மதீஷா பத்திர (11 விக்கெட்)க்குப் பிறகு ஆசியக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக வெல்லலகே முடித்தார். அவர் 6 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இப்போது இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆடுவதற்கு தயாராகி வருகிறார் வெல்லலகே.
Dunith Wellalge has changed his DP to a picture with Virat Kohli.
– Virat Kohli is an inspiration…!!! pic.twitter.com/ociflKyN3K
— Johns. (@CricCrazyJohns) September 19, 2023
Dunith Wellalage Interacted With @imVkohli After The Asia Cup Final.🥰💙#AsiaCupFinal #INDvSL #ViratKohli pic.twitter.com/KhEuO7P947
— virat_kohli_18_club (@KohliSensation) September 19, 2023