திருவண்ணாமலை அருகே மாற்று திறனாளிக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன வேலு என்பவர் மனு அளித்தார்.

அதில் எந்த ஒரு நிதி உதவியும் கிடைக்காமல் தனது இரண்டு வயது மகனுடன் அவதிப்பட்டு வருவதாக செங்கம் சட்டமன்ற உறுப்பினரிடம் வேதனை தெரிவித்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேலுவுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.