திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது மாற்று மதத்தினரும் பணி புரிகின்றனர். இந்நிலையில் அறங்காவலர்கள் குழு தேவஸ்தானத்தில் பணிபுரியும் மாற்று மதத்தினரை மாற்றி விட்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது.

இதற்காக மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுப்பதா அல்லது வேறு வேலைக்கு மாற்றுவதா என இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவாய்த்துறை உள்ளிட்ட பணிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.