
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ 10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அலுவலக எக்ஸ் பக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல் திருமாவளவன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. @thirumaofficial அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான ரூ. 10 இலட்சத்திற்கான… pic.twitter.com/Xl5p4diTBT
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 9, 2023