கடந்த 2022 – 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது‘தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவக் கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக சுற்றுலா  செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச்செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய உணவுடன் கூடிய இந்த பயணம் பற்றிய விவரங்களை, www.ttdconline.com என்ற தளத்திலும், 1800 4253 1111 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.