தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜனவரி 2ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வீடு வணிக பயன்பாடு தொழிற்சாலைகள் என அனைவருக்கும் மின்கட்டணம் செலுத்த ஜனவரி இரண்டாம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.