
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் நீண்ட காலமாக குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த தம்பதி ஒருவர் உயர் மின்னழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் பகுதியை சேர்ந்த குமரேசன் (35) என்பவருடைய மனைவி புவனேஸ்வரி (28).
இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டின் மாடிக்குச் சென்று அங்கு மின் கம்பத்தில் இருந்த மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.