ஹரியானா மாநிலத்தில் கைதல் நகரில் ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இதன் அருகே சாலையோரமாக நாற்காலி போட்டு 5 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சாலையில் வாலிபர் ஒருவர் கார் ஓட்ட பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறுதலாக பிரேக் போடுவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார்.

இதனால் அந்த கார் வேகமாக நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியதில் அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில் மூவர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.