வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளவும், தடையின்றி மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்காக மின் பராமரிப்பு (Electrical Maintenance )பணிகளை 1 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று (ஆக.28) அதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், நடப்பு நிதி ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பணிகள் பற்றி விரிவாக ஆலோசனை மற்றும் விவாதங்கள் நடைபெற்றது.

பராமரிப்பு பணிகள் கடந்த ஜூலை 1 முதல் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஞ்சிய பராமரிப்பு பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

“>