
நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர்தான் மணிகண்டன். ஆரம்பத்தில் நண்பர்களோடு சேர்ந்து youtube வீடியோக்களை போட்டு வந்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் 8 தோட்டாக்கள், காலா ,நெற்றிக்கண், ஜெய்பீம் போன்ற படங்கள் கவனிக்கப்பட்டது. அதிலும் ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணு வேடத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்தார். குட் நைட் படத்தின் மூலமாக கதை ஹீரோவாக மாறினார். அந்த படம் ஹிட் அடிக்கவே லவ்வர், குடும்பஸ்தன் படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தது. இந்த நிலையில் மணிகண்டன் தன்னுடைய மிமிக்ரி குறித்து கூறியதாவது, “அங்கீகாரம் தான் ஒவ்வொரு கலைஞனுக்கும் தேவை. அது கிடைக்காமல் எந்த கலைஞனும் முழுமை பெற முடியாது. மிமிக்கிரி என்பது கடினமான விஷயம். அதன் மூலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருவது பெருமை. பல நடிகர்களின் குரலை எடுத்து வருவதால் என் குரலே எனக்கு சில சமயத்தில் மறந்து போகிறது. மேடை நிகழ்ச்சியில் என் குரலில் பேசவே சிரமப்பட்டு போகிறேன். அந்த அளவுக்கு என்னுடைய குரலை இழந்து விடுகிறேன்” என்று கூறியுள்ளார்