
மத்திய பிரதேச மாநிலம் கட்டணி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ரவீந்தர் சிங் இந்திய ராணுவத்தில் வேலை பார்க்க தேர்வு செய்யப்பட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அம்மா அப்பா மன்னித்து விடுங்கள் நான் ராணுவத்தில் சேரும் வாய்ப்பு பெற்று இருந்தாலும் இதை பொறுத்துக் கொண்டு வாழ முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
நான் சுஜித் புஷ்வாகா மற்றும் இன்னொருவரிடம் இருந்து 22,000 பணம் வாங்கினேன். அவர்கள் தற்போது 1.5 லட்சம் பணம் தர வேண்டும் எனக் கூறுகிறார்கள். எனது பெற்றோரும் 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டுகிறார்கள். அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். அந்த வீடியோவை பெற்றோருக்கு அனுப்பி விட்டு ரவீந்தர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒரு மலைப்பகுதியில் மயங்கி கிடந்த ரவீந்திர மேட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரவீந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரவீந்தரின் செல்போனை ஆய்வு செய்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22-Year-Old Ends His Life By Consuming Poison After Being Harassed By Moneylenders Over Loan In MP’s #Katni District#MPNews #MadhyaPradesh pic.twitter.com/3FjeeRMVoV
— Free Press Madhya Pradesh (@FreePressMP) March 25, 2025