
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குடேம் மாவட்டத்தில் மானச விகாசா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் மாணவனை கடுமையாக தாக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் முதலில் சிறுவனின் முதுகில் ஆசிரியர் கொடூரமாக அடிக்கிறார். வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அலறுகிறான். இருப்பினும் அந்த ஆசிரியர் இரக்கமின்றி கைகளைப் பிடித்து மாணவனை தரதரவனெ இழுத்துச் சென்று மீண்டும் மாறி மாறி அதே இடத்தில் அடித்தார்.
அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்து செல்போன் கீழே விழுந்த நிலையில் அதனை எடுத்து பாக்கெட்டில் வைத்து சரி செய்துவிட்டு மீண்டும் சிறுவனை அடிக்க தொடங்குகிறார். அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்த நிலையில் கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அதனை வீசியதோடு அதனை சென்று எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த புத்தகத்தை எடுக்க சிறுவன் எழுந்தபோது மீண்டும் தரையில் தள்ளிவிட்டு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்குகிறார். அந்த ஆசிரியரின் தாக்குதலால் மீள முடியாத சிறுவன் அழுது கொண்டே தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறினான்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பு திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உண்மை தன்மையை ஆராய்வதற்காக பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஆசிரியர் சிறுவனை கொடூரமாக தாக்கும் வீடியோக்கள் இருந்தது. அதனைப் பார்த்து சிறுவனின் பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
హోమ్ వర్క్ చేయలేదని పిల్లాడిని చావబాదిన టీచర్
భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా లక్ష్మీదేవిపల్లి మండలంలో ఓ ప్రైవేట్ స్కూల్లో సతీశ్ అనే టీచర్ హోం వర్క్ చేయలేదని ఆరో తరగతి విద్యార్థిని చావబాదాడు.
తమ బిడ్డ ఒంటిపై దెబ్బలు చూసిన తల్లిదండ్రులు సీసీ ఫుటేజీ ఆధారంగా టీచర్పై పోలీసులకు… pic.twitter.com/2Gr5DCFfox
— Telugu Scribe (@TeluguScribe) October 17, 2024