தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் நிலையில் மலையாள சினிமாவிலும் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருக்கிறார். நடிகை தமன்னா தற்போது ஒடேலா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இது கடந்த 2022 ஆம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளிவந்த ஒடேலா ரயில்வே ஸ்டேஷன் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் போன்றவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் வைத்து இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று தமன்னா அழைக்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்துள்ளார்.

மேலும் இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.