உத்தரகண்டின் போரி கர்வால் மாவட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடந்த ஒரு துயரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரமோத் பிஞ்சோலா என்ற இளம் இளைஞர், தினமும் காலையில் நடை மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதேபோன்று கடந்த 17-ம் தேதி  அதிகாலை வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென சோர்வடைந்து சாலையோரம் இருந்த கல்லில் உட்கார்ந்து ஓய்வெடுத்தார். சில நொடிகளில் அவர் திடீரென கீழே சரிந்து விழுந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள், ஆரம்பத்தில் அவர் மயக்கமடைந்ததாக நினைத்தனர்.  உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு  சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.

மேலும் சமீபகாலமாக இளம் வயதினர் உடற்பயிற்சி செய்யும் போது நடனமாடும் போது என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதேபோன்று ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.