
தமிழகத்தில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது. இருப்பினும் வேலியே பயிரை மேய்ந்தார் போல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரெட்டியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 6-ம் பகுப்பு படிக்கும் ஏழு மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த ஆசிரியர் பிரபுவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.