தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில் ஏராளமானோர்  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை நோக்கி குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாலை 4 மணியளவில் விஜய் கொடியேற்றுகிறார். அதன் பின்னர் மாலை 6 மணியளவில் நிகழ்ச்சியில் அவர் பேச இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது சென்னையில் பைக் விபத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றிகழகத்திற்கு சென்ற இன்னொரு தொண்டரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரயிலில் தொண்டர் ஒருவர் சென்றார். அப்போது விக்கிரவாண்டியை கடந்து ரயில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த தொண்டர் விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் விக்கிரவாண்டிக்கு வர வேண்டுமா என நினைத்து ஓடும் ரயிலில் இருந்து விக்கிரவாண்டியில் குதித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் நிதீஷ்குமார். அதோடு ரயிலில் இருந்த குதித்த மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும் இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில் விபத்தில் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.