
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தற்போது ஒரு மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் பிரான்சிஸ் (35) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதன் காரணமாக அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் நிலையில் தற்போது மாணவனுக்கு ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.