வயது முதிர்ந்த  ஒருவரிடம் உங்கள் வாழ்வில் நீங்கள் மீண்டும் கேட்பது எது என்று கேட்டால் பலரும் கூறுவது தனது இளமை வாழ்க்கையை தான். இளமை என்பது  எப்போதும் நிரந்தரமானது அல்ல. ஒருவர் முதுமை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு இருக்க இதற்கும் ஒரு வழி உண்டு என ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு வாரத்திற்குள் வயதை குறைக்கும் ரசாயன மாத்திரை ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் நலக் கோளாறுக்கும் மனநல கோளாறுக்கும் சிகிச்சை அளிக்க கொடுக்கப்படும் ஐந்து முதல் ஏழு மருந்துகளை சேர்த்து இந்த ரசாயன மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். மூன்று வருட கால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாத்திரையை குரங்குகளுக்கும் எலிகளுக்கும் கொடுத்து பரிசோதனை செய்ததில் வயதாவதை மாற்றும் மனித செல்களை புதுப்பிக்கும்  மூலக்கூறுகளை கண்டுபிடித்துள்ளனர்.