
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் கூகுள், தனது Platforms and Devices பிரிவிலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரிவில் Android இயங்குதளம், Pixel ஸ்மார்ட்போன்கள், மற்றும் Chrome பிரௌசர் உள்ளிட்ட முக்கிய தயாரிப்புகளை உருவாக்கும் குழுக்கள் இயங்கிவருகின்றன. இத்தகைய பணி நீக்கம், பல்வேறு ஊழியர்களிடையே எதிர்பாராத அதிர்ச்சியாகவும், தொழில்நுட்ப உலகில் பரபரப்பாகவும் அமைந்துள்ளது.
ஒருபுறம் குவியும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் ஆட்டோமேஷன், மறுபுறம் வேலையிழப்பும் ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு Platforms மற்றும் Devices பிரிவுகளை ஒன்றிணைத்த கூகுள், செயல் திறனை அதிகரிக்கவே இந்த restructure-ஐ மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனால் பல்வேறு பணியாளர்கள் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து, வேறு வேலை வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது கூகுளின் முதல் பெரும் பணி நீக்கம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு ஜனவரியில், நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதன் பின், 2025 பிப்ரவரியில் கூகுள் கிளவுட் பிரிவிலும் சில ஊழியர்கள் வேலைவிடுவிக்கப்பட்டனர். தற்போது Platforms & Devices பிரிவிலும் மீண்டும் நிலைமை தொடர்வது, கூகுள் ஊழியர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நிறுவனத்தில் பணியாற்றும் பலர் எதிர்காலத்தைப் பற்றி குழப்பத்தில் உள்ளனர்.