
ஹர்திக் பாண்டியா 2020ஆம் ஆண்டு மே மாதம் செர்பியாவை சேர்ந்த நடாஷா ஸ்டான்கோ என்ற மாடல் அழகியைக் திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள், குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இப்படி 4 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து நிலையில் விவாகரத்து செய்வதாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மேலும் இருவரும் தங்களுக்குள் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து பரஸ்பர முடிவெடுத்து பிரிந்து விட்டார்கள். இவருடைய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா வாழ்க்கை மீண்டும் ஒரு காதல் ரிலேஷன் வாய்ப்பு கொடுத்தால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சரியான நேரம் வரும் போது தான் இருவருக்குள்ளான உறவு மலரும் எனவும், வாழ்க்கை கொண்டு வருபவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.