ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ தனது பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், அதற்காக 2 ரூபாய் கட்டணம் விதித்து இருந்தது. அதாவது ஒவ்வொரு முறையும் உணவு வாங்கும்போது பயனாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத்தை 6.ரூபாயாக உயர்த்தியுள்ளன. இதன் மூலம் 20% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஏப்ரலில் சொமேட்டோ நிறுவனம் தனது பயன்பாட்டு கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண முறை டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் மற்ற நகரங்களில் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பயன்பாட்டு கட்டணம் என்பது சரக்கு மற்றும் சேவை வரி, உணவக கட்டணம், விநியோக கட்டணம் மற்றும் சேவை கட்டணம் இவற்றிலிருந்து மாறுபட்டவை ஆகும்.