
தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டண உயர்வை அறிவித்து மின்வாரியம் பொது மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதுவரை யூனிட் ஒன்றுக்கு 4.60 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு சேவை கட்டணங்களையும் தற்போது உயர்த்தி உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி புதிய சிங்கிள் பேஸ் இணைப்பு சேவை கட்டணம் 1020 ரூபாயில் இருந்து 1070 ரூபாயாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே ட்ரிபிள் பேஸ் இணைப்பு சேவை கட்டணமானது 1535 ரூபாயிலிருந்து 1610 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருவருடைய பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவரின் பெயரில் மாற்றும் பெயர் மாற்ற சேவைக்கான கட்டணமும் 615 ரூபாயிலிருந்து 645 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.