மீனம் ராசி அன்பர்களே,

இன்று கவனமாக பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலையும் உங்களுக்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். கனவுகள் கண்டிப்பாக நடக்கும். கவலை மறந்து செயல்படுவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். நிதி நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும்.

சோகங்கள் மாறி சுகங்கள் கூடி வரும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனை தீர்வுக்கு வரும். தவறான பழக்கங்களில் இருந்து விடுபடுவீர்கள். இன்று கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். அனைவரிடமும் இன்முகத்துடன் பேசுவீர்கள். பெண்கள் இன்று  நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஒன்று மற்றும் ஏழு

அதிஷ்ட நேரம்: இளம் மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்