மீனம் ராசி அன்பர்களே,
இன்று காலையில் சீக்கிரமாக எழுந்து சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. கவனமாக சில பணிகளை மேற்கொள்ளுங்கள். காசு பணத்தை பத்திரப்படுத்திவதில் ஆர்வம் இருக்கட்டும். நேரம் காலம் பார்த்து எதிலும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள்.இன்று பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பொது விஷயங்களை கவனமாக கையாளுங்கள்.
சந்திராஷ்ட தினங்களில் வாகனத்தில் செல்லும்போது பொறுமையாக சென்று வர வேண்டும். இரவு நேர பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ளவும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு தயவு செய்து செல்ல வேண்டும். பெண்கள் இன்று சமையலின் போது கவனமாக இருங்கள். கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுங்கள். திறமையால் வெற்றி பெறுவீர்கள்.
முன்கோபம் வெளிப்படும். உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று மாணவர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும். கலைத்துறையிலும் சாதிக்க முடியும். மகிழ்ச்சி மிகுந்த நாளாகவே இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக படைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்