மீனம் ராசி அன்பர்களே, இன்று வெளியிடங்களில் உங்களுக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் அக்கறை கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சமூகப் பொறுப்புகள் தேடி வரும். பிறரிடம் குடும்ப விஷயத்தை பேச வேண்டாம்.
தாயின் அன்பும் ஆசியும் பலமாக கிடைக்கும். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். சிரமங்கள் தவிர்க்கப்படும். மிதமான பண வரவு இருக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கருத்துக்களை பரிமாறும் போது நல்லது கெட்டதுகளில் பங்கேற்பீர்கள். பெண்கள் இந்த நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்