மீன ராசி அன்பர்களே,
இந்த நாள் வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். சிலர் உங்கள் மீது கண்டிப்பாக நல்ல எண்ணங்கள் வைத்துக் கொள்வார்கள். அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் புதுவித உற்சாகம் பிறக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். இன்று யோகமான நாளாக அமையும். நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
இன்று யாரையும் புண்படுத்தாமல் பேசுவீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மேலோங்கும் . இந்த நாள் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அனைவரிடமும் பாதுகாப்பாக பேசி பழகுவது நல்லது.
இன்று பெண்களுக்கு நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். சிந்தனையை நல்ல முறையில் ஒருநிலைப்படுத்துவீர்கள். பெண்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் ஏற்படும். இந்த நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் சாதிக்க முடியும். உயர் கல்வி சிறப்பாக அமையும். முயற்சி செய்தால் ஜெயிக்க முடியும். இன்று நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : ஐந்து மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்