மீனம் ராசி அன்பர்களே,
இன்று பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள் என்று சொல்ல முடியும். வெகு நாள் பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றி பெறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனம் மகிழ்ச்சியுடன் காணப்படும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.
நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பிடிவாத குணத்தை விட்டு விடுங்கள். இன்று பெண்கள் நேர்மையான குணம் கொண்டவராக காணப்படுவீர்கள். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு ஆசைகள் நிறைவேறும் நாள் என்றே சொல்ல முடியும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள்.
கல்வியில் வெற்றி பெற முடியும். உயர் கல்வி மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை