
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த முருங்கை கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற கோவிந்தனின் மகளை முகத்தில் காயத்தோடு ஆசிரியர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். சிறுமி கீழே விழுந்ததால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் முதலுதவி சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். மேலும் பெற்றோருக்கு உரிய தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்