
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் டி20 போட்டிகள் தொடங்கியது. இதில் 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ள நிலையில் முதல் போட்டியில் 16 வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது அந்தப் பந்தை அவர் கேட்ச் பிடிக்க முயன்ற நிலையில் இடது கையால் கேட்ச் பிடித்தார். அவர் கேட்ச் பிடித்துவிட்டு கீழே விழுந்த போது திடீரென பந்து எகிறியது.
இதில் அந்த பந்து இடது கண்களின் கீழ் பலமாகப்பட்டது. இதனால் ரவி பிஷ்னோய் கண்களுக்கு கீழ் ரத்தம் வழிந்ததால் அவர் அந்த இடத்திலேயே கதறினார். உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் ஐஸ் பேக் வைக்கப்பட்டு முகத்தில் பேண்டேஜ் ஒட்டப்பட்டது. அதன் பின் அவருடைய கண்களில் பிரச்சனை இல்லை என்று தெரிந்த பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மேலும் காயத்திற்கு பிறகும் தொடர்ந்து அவர் விளையாடி விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
— Bangladesh vs Sri Lanka (@Hanji_CricDekho) July 27, 2024