தூத்துக்குடியை சேர்ந்த வாலிபருக்கு முகநூல் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் வாலிபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த பாலமுருகனும், அவரது மனைவியும் சேர்ந்து வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் பாலமுருகன் அவரது மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.