
இந்தோனேசியாவில் திருமணம் முடிந்த 12 நாட்களுக்கு பின்னர் மனைவி ஒரு ஆண் என்று தெரிய வந்ததால் கணவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் நடந்துள்ளது. AK என அடையாளம் காட்டப்படும் 26 வயது மணமகன் கடந்த 2023 ஆம் ஆண்டு இணையதளம் மூலமாக அதிண்டா கான்சா என்பவருடன் பேசிய நிலையில் விரைவில் காதல் வலையில் சிக்கியுள்ளார். பிறகு அந்த பெண்ணை நேரில் சந்தித்தபோது எப்போதும் பாரம்பரிய முஸ்லிம் உடையான புர்கா அணிந்துள்ளார். ஆரம்பத்தில் AK, இது அவரது மத பக்தியின் அடையாளம் என்று கருதியுள்ளார். பிறகு ஏப்ரல் மாதம் வீட்டில் சிறிய அளவில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சந்தேகத்திற்கு கிடமான சில விஷயங்கள் தென்பட்டுள்ளது.
அதாவது அதிண்டா தொடர்ந்து தனது முகத்தை மறைத்து வைத்துள்ளார். இதனால் கணவரின் குடும்பத்தினருடனும் பழகுவதை அவர் தவிர்த்து உள்ளார். அது மட்டுமல்லாமல் திருமண தாம்பத்திய உறவுக்கும் மாதவிடாய் மற்றும் உடல் நலக்குறைவு போன்ற பல காரணங்களை சொல்லி தப்பித்துள்ளார். திருமணம் முடிந்து 12 நாட்கள் கழித்து சந்தேகம் வந்த AK, விசாரிக்க தொடங்கியபோது அதிண்டாவின் பெற்றோர் உயிருடன் இருப்பதையும் இந்த திருமணம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதையும் கண்டறிந்தார்.
அது மட்டுமல்லாமல் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிண்டா உண்மையில் ESH, 2020 முதல் பெண் வேடமிட்டு வருபவர் என்பதையும் அறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் பெண் வேடமிட்டு அவரை கைது செய்த போலீசார் விசாரித்ததில் AK வின் சொத்துக்களை திருடவே அவரை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டு உள்ளார்.