
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீடு உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாக உள்ளது. 27 மாடி கட்டிடம் கொண்ட இந்த வீட்டில் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதான் அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி, ஸ்லோக அம்பானி ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் மொத்த மதிப்பு சுமார் 15000 கோடி என கூறப்படுகிறது. இந்த ஆடம்பர வீட்டில் சமையல் மற்றும் பராமரிப்பு என 600 பேர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் தங்குமிடம் மற்றும் உணவு என பல உதவிகள் செய்யப்படுகின்றன.
இவர்களின் ஒரு மாத சம்பளம் மட்டுமே இரண்டு லட்சம் என்றும் இவர்களின் பிள்ளைகள் சிலர் வெளிநாட்டில் படிப்பதாகவும் கூறப்படுகின்றது. இங்கு வேலைக்கு சேர்பவர்களுக்கு கடுமையான பயிற்சிக்கு பின்னர் தான் சேர்ப்பார்களாம். ஓட்டுனரின் வேலைக்கு கடுமையான சோதனை செய்யப்படும். இங்கு வேலைக்கு ஆள் எடுப்பதற்கு நம்பகமான நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு நன்கு படித்தவர்களாகவும் பொது அறிவு மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.