இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவருடைய இளைய மகன் ஆனந் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண விழா நேற்று தொடங்கியது. இந்த திருமணத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடக்க இருக்கும் இந்த திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோக்கள் ஆனது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது .

இந்த நிலையில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா மற்றும் அவருடைய கணவர் நிக் ஜோன்ஸ் கலந்து கொண்டிருந்தனர். திருமணத்தில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் குத்து பாடல் ஒன்றிற்கு கணவர் முன்னிலையில் நடனமாடியுள்ளார் பிரியங்கா சோப்ரா. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.