
காசியாபுரம் என்னும் பகுதியில் சோனு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடையில் முடி திருத்திக் கொண்டிருக்கும்போது அவருடைய மொபைல் போன் திருடு போனது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார். அதன் பிறகு திடீரென ஒரு நாள் அவருக்கு நத்திங் இந்தியா நிறுவனத்திடமிருந்து ஒரு புது மொபைல் போன் பரிசாக வந்தது.
இதைப்பற்றி மேலும் விசாரித்த போது அவர் வருத்தமாக இருப்பதை கண்டு அவருடைய வாடிக்கையாளர்களில் ஒருவரான ரோகித் சலுஜா அவருக்கு புதிய போன் ஒன்றை வாங்கி கொடுப்பதற்காக நிதி திரட்டும் பணியில் இறங்கினார். அதற்காக அவர் புது தில்லியில் உள்ள கனாட் ப்ளேஸ் என்ற பகுதியில் நிதி திரட்டும் வகையில் QR குறியீட்டைக் கொண்ட டி-ஷர்ட் அணிந்து கொண்டு நின்றார்.
அப்போது அவரைக் கண்ட பூஜா சன்வால் என்பவர் புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்தப் பதிவு இணையதளத்தில் வேகமாக வைரலானது. இதற்காக கடந்த ஜூலை 16ஆம் தேதி ரூ.1600 நிதி உதவி கிடைத்தது. மேலும் கிரவுட் ஃபண்டிங் milaap ல் ரோகித் சலுஜா, சோனு இனிமையான குணமுடையவர் என்றும் இந்த மொபைலை பரிசாக அளிப்பதன் மூலம் அவர் “மீண்டும் புன்னகைக்க” என்றும் பதிவிட்டுள்ளார்.