இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் வியப்பானதாகவும் பார்ப்பதற்கே அச்சமூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு மயில் பல முட்டைகளை இட்ட நிலையில் அதன் மீது அமர்ந்திருந்தது.

 

அந்த சமயத்தில் வந்த ஒரு இளம் பெண் அந்த மயிலை தூக்கி வீசிவிட்டு முட்டைகளை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது மயில் அந்த பெண்ணின் மீது பாய்ந்தது. அந்தப் பெண்ணை மயில் தாக்கி கீழே தள்ளிய நிலையில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்தப் பெண் முட்டைகளை என்ன காரணத்திற்காக எடுக்க வந்தார் என்பது சரிவர தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.