முதலையை கத்தியால் குத்த சென்ற நபருக்கு என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காட்டில் கத்தியுடன் ஒரு மனிதன் முதலையிடம் செல்வதை பார்க்க முடிகிறது.

ஆற்றிலிருந்து வெளியில் வந்து அந்த முதலை ஓய்வெடுப்பதாக தெரிகிறது. அந்நபர் முதலையை கத்தியால் தாக்க முயற்சிக்கிறார். உடனே  சுதாரித்துக்கொண்ட முதலை அவர் கையை கவ்வி பிடித்துக் கொள்கிறது.. வீடியோவை பார்க்கும்போது முதலை அந்நபரின் கையை கடித்திருக்கும் என தோன்றுகிறது.