
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என்று ஆளுநர் ரவியை சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் விஜயை தொடர்ந்து அண்ணாமலையும் திடீரென ஆளுநரை சந்தித்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்தது தொடர்பாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அதாவது பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று அங்கு பெண்களின் நிலைமையை பார்த்த பிறகு விஜய் இங்குள்ள பெண்கள் நிலைமை பற்றி பேசட்டும் என்றார்.
மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தி நிலையில் அது தொடர்பாகத்தான் இன்று ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார். அதோடு திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது எனவும் விஜய் விமர்சித்துள்ள நிலையில் இது தொடர்பாக தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். இந்த நிலையில் தான் அமைச்சர் ரகுபதி பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படி கூறியுள்ளார்.