சேலத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அககட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றதற்கு தனி வரலாறு இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோடு பொய் தகவல்களை பரப்புகிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு சேலத்திற்கு முதல்வரும் துணை முதல்வரும் அடிக்கடி வந்து வந்து செல்கிறார்கள். அவர்கள் எத்தனை முறை வந்து சென்றாலும் சேலம் அதிமுகவின் கோட்டைதான். இதனை ஒருபோதும் அவர்களால் மாற்ற முடியாது என்றார். அதோடு திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக இந்த கூட்டணி நீடிக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மேலும் பெரும்பாலாக அரசியல் கட்சிகள் சேலம் சென்டிமென்ட் பார்ப்பார்கள். ஏனெனில் கொங்கு மண்டலத்தில் வெற்றி என்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவார்கள். சேலம் அதிமுகவின் கோட்டை என்று எடப்பாடி பழனிச்சாமி கருதி வரும் நிலையில் சேலத்தில் திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தியது உண்டு.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது கூட சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியே வந்து கலந்து கொண்டார். மேலும் இப்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சேலம் செண்டிமெண்ட் பார்க்கும் நிலையில் அதனை அதிமுக தங்கள் கோட்டையாக கருதி வருவதோடு ஒருபோதும் திமுகவால் சேலத்தை கைப்பற்ற முடியாது என்றும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.