
தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு வருடங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதிதாக உதித்துள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியும் களமிறங்க உள்ளது. இதனால் தற்போது தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நேற்று ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், குண்டு வெடிப்பு சம்பவம் கோவை வளர்ச்சிக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் கொண்டாட கூடிய பண்டிகைக்கு வாழ்த்து கூறாத முதல்வர் ஸ்டாலின் திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் இந்து மதம் பிரிவினை ஏற்படுத்துகிறது என்றும் உலகில் எங்கு சென்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஓரளவுக்கு தான் பொய் பேச வேண்டும். கடைசி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உங்களுடைய ஆட்சி காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக தான் மலரும் என்று பேசியுள்ளார்.