
நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாணவர்களின் கல்வியை பாதிப்பது மும்மொழி கொள்கை மட்டும் கிடையாது. மாணவர்களின் கல்வியை பாதிப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான். புதிய கல்விக் கொள்கை என்றால் முன்னமொழிக் கொள்கை மட்டும் கிடையாது. புதிய கல்விக் கொள்கை என்றால் பிரதம மந்திரியின் உலக அரங்கில் படிப்பை எடுத்து செல்வது தான் அதற்கு அர்த்தம்.
அப்படி என்றால் டிஜிட்டல் கிளாஸ் ரூம், டிஜிட்டல் எஜுகேஷன் என அனைத்தும் அடங்கியது. ஆயிரக்கணக்கான பள்ளியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர்தர கல்வியை கொடுக்கிறார்கள். அப்போ நீங்க உயர்தர கல்வி வேண்டாம் என்று சொல்கிறீர்களா. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை என்பது ஒரு பகுதி தான். தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படவில்லையா? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லட்டும். இது ஆணவத்தில் பேசுவது தான். தயவுசெய்து மாணவர்களின் வாய்ப்பை தட்டி பறிக்காதீர்கள் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டமாக பேசியுள்ளார்.