தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. இவருடைய மகள் சித்தாரா. இவருக்கு தற்போது 12 வயது ஆகும் நிலையில் மாடலிங் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்றில் சித்தாரா நடித்தார். அதற்கு அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.

இந்த சம்பளத்தை சித்தாரா ஒரு தொண்டு நிறுவனத்திற்கு தானமாக கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் சிறுவயதிலேயே இப்படி ஒரு உதவும் மனப்பான்மை இருக்கிறதா என சித்தாராவை புகழ்ந்து வருகிறார்கள். மேலும் சித்தாரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் ஏராளமானோர் அவரை இன்ஸ்டாவில் பின்தொடர்கிறார்கள்.