திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டூரை சேர்ந்தவர் இன்ப குமார். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு 18 வயது பூர்த்தியாக சந்தியா என்ற சிறுமியை இன்பகுமார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இன்பகுமார் சந்தியா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்த இன்பகுமார் மீது சந்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ப குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இன்ப குமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் புகார் கொடுத்த சந்தியாவே இன்ப குமாரை விடுவிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில் 3 பெண் குழந்தைகளுடன் முதல் மனைவியும், ஒரு பெண் குழந்தையுடன் தானும் ஆதரவின்றி தவிப்பதால் இன்ப குமாரை விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்