முதியவரை கழுத்தறுத்து கொல்ல முயன்று பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா போதையில் முதியவரை கொல்ல முயன்ற வடமாநில இளைஞரை தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த வட மாநில இளைஞர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.