கேரளாவில் 92 வயது முதியவரின் வாக்கை பதிவு செய்ய வனவிலங்குகள் அதிகம் வாழும் மலைப்பகுதி காட்டுக்குள் 18 கிலோமீட்டர் தூரம் தேர்தல் அதிகாரிகள் பயணித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் எடமலை குட்டியை சேர்ந்த சிவலிங்கம், முதுமை காரணமாக படுத்த படுக்கையாக உள்ளார். இருப்பினும் வீட்டிலிருந்து வாக்களிக்க மனு அளித்ததால் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது அதிகாரிகள் சென்று அவருடைய வாக்கை பதிவு செய்தனர்.