
ஆந்திர மாநிலத்தில் உள்ள மதன பள்ளியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான கூலித் தொழிலாளி. கடந்த 14-ஆம் தேதி வீராசாமிக்கும் அவரது சகோதரர் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் அந்த வாலிபர் வீராசாமியின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த வீராசாமி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த கத்தி அவரது உடலுக்குள் 15 சென்டிமீட்டர் பாய்ந்திருந்தது.
நீண்ட நேரம் போராடி மருத்துவர்கள் அந்த கத்தியை அகற்றி விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கூறியதாவது, அந்த கத்தி வீராச்சாமியின் இடதுபுற நுரையீரல் மற்றும் இதயத்தில் இருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் சொல்லும் அயோடா தமணியிலும் கிழிசசை ஏற்படுத்தி இருந்தது. மயக்க மருந்தின் நிபுணர்கள் உதவியோடு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வெற்றிகரமாக இந்த கத்தியை அகற்றி விட்டனர் என கூறியுள்ளார்.